கோபம் மனிதனிடம் காணப்படும் ஒரு அறியாமை. கோபம் இதனால் நமக்கு வருகிறது *நமக்கு ஒரு செயல் நடக்காமல் இருக்கும் போது கோபம் வருகிறது. சில நபர்களிடம் அன்பு வைக்கும் போது அவர்கள் செய்யும் தவறால் நாம் கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.சில தவறான மனிதர்கள் நம்மிடம் பேசும் போது கோபம் வருகிறது. நாம் முதலில் மற்றவர்களை பார்க்க கூடாது. ஒருவன் ஒரு செயலை சரியாக செய்யவில்லை என்று கூறும் போது கோபம் வருகிறது முதலில் நம் எண்ணங்களை சரியாக வைத்து கொள்ளவேண்டும் முதலில் நம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.நம்மிடம் புரிதல் இருந்தால் கோபத்தை தவிர்க்கலாம். நம்மிடம் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் சரியா தவறோ அவர்கள் பேசுவதை கேட்டு சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லை என்றால் தவிர்க்கவும். மன்னிக்கும் மனது நம்மிடம் இருந்தால் கோபம் வராது. கோபம் நம் வாழ்க்கையில் விழ்ச்சி தவிர வளர்ச்சி இல்லை. கோபம் வரும் போது நமக்கு பிடித்தவர்களை நினைத்து கொள்ளுங்கள் கோபம் வராது. கோபம் வரும் போது நம் எண்ணங்கள் வளர்ச்சியை சிந்திக்க வேண்டும் நமக்கு பிடித்தவைகளை எண்ண வேண்டும்.கோபம் பட வேண்டும் தேவையான இடங்களில் எல்லா இடங்களில் இல்லை. ஒரு நிமிடத்தில் கோபப்பட்டு நம் வாழ்க்கை இழக்கும் சுழ்நிலை ஏற்படுகிறது. நம் கோபப்பட்டு பின்னர் வருந்துகிறோம். கோபத்தை தவிர்க்கவும் பொறுமையை கடைப்பிடிக்கவும்.
Comments
Post a Comment